Thursday, February 25, 2010

சிட்டுக்குருவி

அந்தச் சிட்டுக்குருவியை
மிகவும் நேசித்தேன்
அதன் மெல்லிய இறகுகளை
அதன் சிறிய சொன்டை,
அதன் மென்மையான
கிரிச்  கிரிச் ஓசையை , 
குறுக்கும் நெடுக்கும்மாக
தத்தி செல்லும் அழகை.
கவட்டைபுல்லுக்கு இரையாகி
அதன் கண்கள் ஆழ்ந்த அமைதிக்கு
சென்றுகொண்டிருந்த போது ,
மென் பஞ்சு பொதி போன்ற அதன்
உடலின் துடிப்புகள் எனக்குள் ஒரு
செய்தியை பரப்பியது.
இந்த நூற்றாண்டின் கடைசி
குருவியின் கடைசி நாழிகையை
உன்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறது.

1 comment:

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு... வாழ்த்துக்கள்...