Wednesday, March 3, 2010

சில குறிப்புக்கள்

தனித்து விடப்பட்ட ஆன்மாவே
உனக்கு நண்பர்கள் இல்லையா ?
நான்   ஒரு நாடோடி என் ஆன்மாவை
யாரும் நெருங்கும் பொழுதில்
இறக்கம் இல்லாமல் வேறு உலகுக்கு
 புலம் பெயர்கப்பட்டிருப்பேன்  .
நான்  யாரையும் நெருங்கும் பொழுதில்
அவர்கள் வேறு உலகுக்கு
புலம் பெயர்கப்பட்டிருப்பார்கள்.
என்னை சுற்றி இப்பொழுது பல ஆன்மாகள்
இருக்கின்றன.
வெற்று இரைச்சல்கள் அவைகளிடம் இருந்து
தப்பிக்கவே விரும்புகிறேன்.
நன்பன் என்னும் வெற்றிடத்தை தனிமை
ஆழ்ந்த மௌனத்தின் முலமாக நிரப்புகிறேன்.

No comments: