21 ஆம் நூற்றாண்டின் நாடோடியே
உனது வேர்களை கண்டடைய
முயலாதே.
உனது கலாச்சார அடையாளங்களை
மறுபதிப்பு செய்யமுயலாதே. .
உனது உடுப்பை கண்டு மிரளுபவர்களை
பார்த்தாயா.
அது காட்டுமிராண்டிகளின் அடையாளம்
என்று முத்திரை குத்தப்பட்டு
வெகு நாட்களாகி விட்டது.
உனது ஞானமரபுகளை நினைவு
அடுக்கின் ஆழப்புதைத்து விடு.
அதை ஒருபோதும் உன் குழந்தைகளுக்கு
கற்பிக்காதே.
அவர்களுக்கு 21 ஆம் நூற்றாண்டின்
செத்த சொற்களைச் சொல்லிக்கொடு.
போலிப் பாசாங்குகளை அள்ளிப்பூசி விடு.
இரட்டை வாழ்கை வாழ்பவனே
அந்த கொடுரத்தை உனது சந்ததிகளுக்கு
ஒருபோதும் பரிசளித்து விடாதே.
21 ஆம் நூற்றாண்டின் நாடோடியே
எதற்காக கண்ணிர் விடுகிறாய்
உன்னுடைய கடைசி பூவரச மரம்
சாகத்தான் போகிறது.
இனி அதை ஒருபோதும் உலகில்
காணவே முடியது.
அதற்கு மாற்றாக பேப்பர் ரோசுகளை
வளர்த்துக்கொள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment