Monday, February 1, 2010

நண்பனே

நண்பனே ! 
உன்னை முடக்கிப் போட்ட ஒன்றுதான்
என்னையும் முடக்கிப் போட்டது.
ஆனால் உன்னைப்போல் வருத்தப்பட்டு
பிறரிடம் சடவு சொல்லித் திரியவில்லை .
அது கொடிய விசத்துடன் என்னைத் தீண்டிய
போதெல்லாம்.
என்னைச் சூழச் சிந்தி விழுந்த பானத்தின்
அதீதத் துளி ஒன்று  என் நாவில் பட்டு
எனக்கான உயிர்ப்பை கொடுத்து
கொண்டிருக்கிறது.

No comments: