Monday, February 1, 2010

சிதறுவதும் சிதைவதும்

வெடித்துச் சிதறினோம்
அணு அணுவாய்ச் சிதைந்து போனோம் 
தோல்களைக் காகிதமாக்கி
எலும்புகளைப் பேனாவாக்கி
 குருதியை மையாக்கி
எங்களுடைய கண்ணீரை
சொற்களாக மாற்றினோம்.
உலகம் எங்கும் வியாபித்திருக்கும்
நிறங்கள் எங்கள் சொற்களை
மறைத்தது.
சிதறுவதும் சிதைவதும் அத்துணை
இனிமையான காரியம் ஒன்றும் இல்லை.
ஆனால் இன்னும் எத்தனை ஒளியாண்டுகளுக்கு
தொடருமோ.

No comments: