Monday, December 28, 2009

எனது விடுதலை


என் இடத்தை யாராவது
எடுத்துக் கொள்ளுகள்.
பல முறை தப்பிக்க முயன்றும்
மடக்கி நிறுத்தப்பட்ட இடத்தை.
போரின் வேதனையை
காணச் சகியாமல்
கண்களை இறுக மூடிக்கொண்டு
போரின் ஓலங்களை
கேட்கச் சகியாமல்
காதுகளை இறுக மூடிக்கொண்டு
நிற்கும் இந்த இடத்தை
யாரவது எடுத்து கொள்ளுகள்.

Wednesday, November 4, 2009

சொற்கள்



நினைவில் உறங்கும்
பல சொற்கள் எப்பொழுதும்
விழிக்கக்கூடாது என்றே
விரும்புகிறேன்.
அவ்வப்போதான அதன்
விழிப்புகள் நீண்ட உறக்கத்தை
தரக்கூடிய பொருளை தேடி
அலையத் தூண்டுகிறது.

Saturday, October 10, 2009

இல்லை இல்லவே இல்லை.




என்னை சிதைத்து சிதைத்து,
என்னை உடைத்து உடைத்து,
இந்த மனிதர்கள் கேட்கும்
நல்லவனை தேடினேன்.
எனக்குள் அப்படி ஒரு நல்லவன்
இல்லை இல்லவே இல்லை.
உடல் எங்கும் ரணமாகி
குருதி வழிகிறது.
என்னை தீண்டும் தென்றல் கூட
வேதனையாகிவிட்டது.
இப்பொழுது
என்னால் சிறு குழந்தையின்
சிரிப்பையும் ரசிக்க முடியவில்லை
என்னால் நிலவோடும்
பேசமுடியவில்லை.

Friday, October 9, 2009

எப்படி நுழைந்தது என்னுல்.?



எப்படி நுழைந்தது என்னுல்.?
யாரும் அறியாம்மல் மலரும்
மலரைப் போலவா .
எப்படி நுழைந்தது என்னுல் ?
மென்மையாக உடல் மீது படரும்
தென்றலைப் போலவா.
எப்படி நுழைந்தது என்னுல் ?
உள்ளத்தில் ஊடுருவும் நிலவின்
குளிர்ச்சியைப் போலவா
எப்படி நுழைந்தது என்னுல் ?

Sunday, September 27, 2009

பயனற்ற பார்வையாளன்


என்னைச் சுற்றித் துளிர்க்கும்
ஒவ்வொரு துளி கண்ணீரையும்
துடைக்க என் கரங்கள் நீளுகின்றன.
கரங்களை எடுக்கும் முன் ஆறாகப்
பெருகி ஓடுகிறது கண்ணீர் .
துயரத்தால் நெஞ்சுடைந்து தெறித்து
வரும் குருதியை கண்டு காப்பாற்ற
என் கரங்கள் நீளுகின்றன.
அதற்குள் ஓரயிரம் நெஞ்சங்கள்
உடைந்து சிதறிவிட்டன.
அதோ சில கழுகுகள்
உடைந்த நெஞ்சத்தை உண்டு கண்ணீரை
குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளுகின்றன.
ஏதும் செய்ய இயலாத
பார்வையாளனாக இருந்து என்ன பயன் .
வெற்று காகிதத்தில்
சொற்களின் தோரணம் கட்டி என்ன பயன்.

Monday, June 29, 2009

நீர்குமிழ்


ஊதுகுழல் உடையவனின்
குழல்களில் இருந்து அழகிய
நீர்குமிழ் ஒன்று வெளிப்பட்டு
காற்றில் மிதந்து மிதந்து
என் உள்ளங்கையில்
வந்து அமர்ந்தது .
அதை ரசித்துக் கொண்டு
மறுகையால் மூட முயல்கையில்
மிண்டும் காற்றில் மிதந்து.
சிறிது தொலைவுச் சென்றதும்
சூரியனின் வெம்மையால்
வெடித்துச் சிதறியது.

Saturday, June 13, 2009

மானுடத்தின் கதறல்


ஆயிரம் வாளால் வெட்டப்பட்ட வலியால்
ஆயிரம் எரிமலை குழம்புகள் சூழ்ந்து எரித்த வலியால்
ஆயிரம் சூரியன் சுட்டெரித்த வலியால்
காயங்களும் வலிகளும்
விண்ணைப் பிளக்கக் கதறுகின்றன.
காயங்களுக்கு மருந்து இடுபவர்களே
என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ?

Wednesday, May 27, 2009

ஏதிலி


எனக்கான கனவுகள் மறுக்கப்பட்டு விட்டது.
என்னுடைய கடைசி துண்டு காணியும் பிடுங்கபட்டுவிட்டது.
நான் ஓடி விளையாண்ட கடற்கரையில்
என் காலடித்தடங்கள் அழிக்கபட்டு விட்டன.
என் இருப்புக்கான அடையாளமும் அழிக்கபட்டு விட்டது.
என் பிள்ளைகளுக்கு அடிமை
என்னும் சொத்தை வழங்க விருப்பம் இல்லாமல்,
இந்த இரக்கம் இல்லாத உலகத்திடம்
என் அடையாளத்தை திருப்பி கேட்டுத் திரியும்
ஒரு பிச்சைக்காரன்.

Saturday, April 18, 2009

கத கதப்பு



அன்பு என்னும் பனித் துளியில் நனைகையில்
பகலவன் பட்டு கானலாய் ஆனது.
கசங்கி விழுந்தேன் .
பால் நிலவின் பிரவாகம் என்னை
அனைத்து.
அதன் கத கதப்பில் இருக்கையில்
ஏன் வந்தது இந்த அம்மாவாசை .

Thursday, April 9, 2009

அந்த பொருள்



பெரிய மதில்களை கடந்து செல்கிறேன்.
ரோஜா தோட்டங்களை கடந்து செல்கிறேன்.
அதன் மணங்களை நுகருகிறேன்.
முழுமதியும் என்னை கடந்து செல்கிறாள் .
கோப்பைகளை வெறுமையாக்கிவிட்டு நண்பர்கள் கலைகிறார்கள்.
எந்த அழகிலும்,
எந்த நறுமனத்திலும் ,
எந்த சொல்லிலும்,
மனம் தேறவில்லை .
கூட்டத்திலும் தனிமையிலும்
மனதை தேற்றும் பொருளை தேடி மனம் அலைகிறது.
ஆனால் அந்த பொருள் என்னை கடந்து செல்லவே இல்லை.....

Thursday, March 26, 2009

எங்கு இருக்கிறாய் நீ ?

கனவுகள் உடைந்து அதன் சில்லுகள்
கால்களை உறுத்திய தருணத்தில்.
வாழ்க்கை கேவலத்தையும் அவமானத்தையும்
பருகவைத்த தருணத்தில் .
உன்னோடு பேச ஆயிரம் சேதிகள் இருக்கின்றன .
உன்னிடம் சொல்ல ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன.
எங்கு இருக்கிறாய் நீ ?

Tuesday, March 3, 2009

முதுகெலும்பு


தெருவில் விளையாட செல்லும்போது
உச்சிப்படை முனி வரும் வெளியே போகாதே என்பாய்.
சாயங்காலம் வெளியே சென்றால்
கூதக்காது அடிக்குது வெளியே போகாதே என்பாய்.
கடல்கரைக்குப் போகாதே பிள்ளை பிடிக்கிறவன்
பிடிச்சுகுவான் என்பாய் .
கணக்கு போடலைனா நீ என் பிள்ளையே
இல்லை என்பாய் .
பால்கார ஆத்தாவிடம் உன்னை தவிட்டுக்கு
தான் வாங்கினோம் என்பாய்.
அவமானம் தாங்காமல் சுருண்டு வீழ்ந்தேன் .
சிறுவயதில் நீ முறித்துப்போட்ட தன்னம்பிக்கை என்னும்
முதுகெலும்பை இப்போது சரிசெய்ய சொல்லுகிறாயே.

Saturday, February 21, 2009

ஏழாம் நாள்

பிணங்களுக்கு இடையில் வாழ்ந்து
என்னுல் மனிதம் மறித்துவிட்டது.
எனக்கும் ஒரு ஏழாம் நாள் வேண்டும்
உயிர்த்து எழ .

Sunday, February 1, 2009

ஓயாத அலை


பாலைக் காற்றே என் கதை கேளாயோ ?
நட்சத்திரங்களின் வீதியில்
நிலவைத் தேடி அலைகையில்.
கை தொடும் தொலைவில் நிலவை கண்டேன்.
திடீரென யாரோ மேகப் படுதவால் நிலவை மூடி,
என்னை பாலைவனத்தின் புதை குழியில் தள்ளினர் .
என் கால்கள் புதை குழிக்குள் சென்று கொண்டிருக்கிறது .
என் கைகள் நிலவை நோக்கி அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.
என் மூச்சி காற்று தீர்ந்து கொண்டிருக்கிறது.
இறைவனின் மீதான நன்பிக்கை வழர்ந்து கொண்டிருக்கிறது .

Thursday, January 15, 2009

குடிக்க வா



பிறரின் இதயங்களில் இருந்து வழியும்
குருதியை
குடித்து குடித்து என் இதயம் நிரம்பி விட்டது.
என் இதயத்தில் இருந்து நிரம்பி வழியும்
குருதியை
குடிக்க யாரவது வாருங்கள்,,

Monday, January 12, 2009

யாரது




தென்றல் என் இதயவாசல் வந்தது .
அனுமதி கேட்காமல் உள்ளே நுழைந்தது .
நீ யார் என்று கேட்டேன் ?
அனுமதி கேட்காமல் வருவது என்றது.
இதுவரை யாரும் திறக்க விரும்பாத என் இதயத்தை
ஏன் திறந்தாய் என்றேன் ?
சிறிது சிரித்தது சிறிது அழுதது .
தென்றலின் குளிர்ச்சியை முழுமையாக
உணரும் முன் என்னில் இருந்து நழுவி
வெகுதொலைவு சென்றுவிட்டது .

Tuesday, January 6, 2009

தனிமையே



நீ பாலைவனத்தில் பிறந்தவளோ ?
கள்ளி பால் அருந்தி வளர்ந்தவளோ ?
ஏன் இவ்வாறு என்னை குத்துகிறாய் .

நீ ஆழியின் நடுவே பிறந்தவளோ ?
அலை ஓசை கேட்டு வளர்ந்தவளோ ?
ஏன் என்னை இவ்வாறு இம்சிக்கிறாய்,

நீ சிறைச்சாலையில் பிறந்தவளோ ?
காவலர் அடி ஓசை கேட்டு வளர்ந்தவளோ ?
ஏன் என்னை இவ்வாறு துவைத்து எடுக்கிறாய்.

நீ பலரின் துன்பக்கண்ணிரை குடித்து வளர்ந்தவளோ ?
அவர்களின் செந்நீரில் குளித்து வளர்ந்தவளோ ?
ஏன் என்னை இவ்வாறு பிழிகிறாய்

நீ கொடுத்த வலிகளெல்லாம் என் மனதை
தகர்க்கும் ஏவுகணை என்றா நினைக்கிறாய் ?

பொறுமையின் குன்றில் ஏறி காத்திருப்பேன்

ஒரு நாள் இந்த பாலைவனத்திலும் மனித
நிழல் விழும்

ஒரு நாள் இந்த ஆழியிலும் கப்பல்
செல்லும்