
நீ பாலைவனத்தில் பிறந்தவளோ ?
கள்ளி பால் அருந்தி வளர்ந்தவளோ ?
ஏன் இவ்வாறு என்னை குத்துகிறாய் .
நீ ஆழியின் நடுவே பிறந்தவளோ ?அலை ஓசை கேட்டு வளர்ந்தவளோ ?
ஏன் என்னை இவ்வாறு இம்சிக்கிறாய்,
நீ சிறைச்சாலையில் பிறந்தவளோ ?காவலர் அடி ஓசை கேட்டு வளர்ந்தவளோ ?
ஏன் என்னை இவ்வாறு துவைத்து எடுக்கிறாய்.
நீ பலரின் துன்பக்கண்ணிரை குடித்து வளர்ந்தவளோ ?
அவர்களின் செந்நீரில் குளித்து வளர்ந்தவளோ ?
ஏன் என்னை இவ்வாறு பிழிகிறாய்
நீ கொடுத்த வலிகளெல்லாம் என் மனதைதகர்க்கும் ஏவுகணை என்றா நினைக்கிறாய் ?
பொறுமையின் குன்றில் ஏறி காத்திருப்பேன்
ஒரு நாள் இந்த பாலைவனத்திலும் மனித
நிழல் விழும்
ஒரு நாள் இந்த ஆழியிலும் கப்பல்
செல்லும்
No comments:
Post a Comment