
என்னைச் சுற்றித் துளிர்க்கும்
ஒவ்வொரு துளி கண்ணீரையும்
துடைக்க என் கரங்கள் நீளுகின்றன.
கரங்களை எடுக்கும் முன் ஆறாகப்
பெருகி ஓடுகிறது கண்ணீர் .
துயரத்தால் நெஞ்சுடைந்து தெறித்து
வரும் குருதியை கண்டு காப்பாற்ற
என் கரங்கள் நீளுகின்றன.
அதற்குள் ஓரயிரம் நெஞ்சங்கள்
உடைந்து சிதறிவிட்டன.
அதோ சில கழுகுகள்
உடைந்த நெஞ்சத்தை உண்டு கண்ணீரை
குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளுகின்றன.
ஏதும் செய்ய இயலாத
பார்வையாளனாக இருந்து என்ன பயன் .
வெற்று காகிதத்தில்
சொற்களின் தோரணம் கட்டி என்ன பயன்.
No comments:
Post a Comment