Sunday, March 7, 2010

ஏன் இப்படி நடக்கிறது நண்பனே

நண்பனே
உலகின் ஆட்சியாளர்களுக்கு
அதி விருப்பமான பானம்
எது தெரியும்மா ?
மக்களின் குருதி.
நண்பனே
கண்டங்களை இணைப்பது
அட்சரேகையோ  தீர்கரேகையோ  இல்லை
வரலாற்றுப் பக்கங்களில் பிரிட்டுக்
கொண்டுவரும் கண்ணீரும் குருதியும்.
அமெரிக்கா
ஜய்ரோபியா     
ஆஸ்ட்ரேலியா 
ஆப்ரிக்கா
அரேபியா
ஆசியா
எல்லாவற்றுக்கும்  பொதுவான
பாடல் துப்பாக்கி வெடி சத்தம்மாகவே இருக்கிறது  .
வொவ்வொரு நாளும் குழந்தைகள்
அனாதைகலாகாமல் விடிவதில்லை.
அவர்களுக்காக கண்ணீர் விடுகிறேன்
அது அவர்களுக்கு எப்பொழும் பயன்
அளிகப்போவதிலை.
என் கனவில் அவர்களின் தலை முடியை
கோதிவிடுகிறேன்.
அவர்களின் நெற்றியில் முத்தம் இடுகிறேன்
மரங்களுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு
அவர்களுடன்  விளையாடுகிறேன்.
அவர்களுக்கு கதை சொல்லுகிறேன்
அவர்களின் விரல் பிடித்து நடை பழகுகிறேன்.
இவை எப்பொழுதும் அவர்களுக்கு
பயன் அளிகப்போவதிலை.

3 comments:

VictoryAthis said...

nice. but what u can to that people or ur brothers and sisters.

VictoryAthis said...

nice. but what u can for that people or ur brother and sister. nice.

VictoryAthis said...

nice. but what u can do for ur people r ur sister brothers. nice