Thursday, January 28, 2010

மிருகம்

ஆழ்மனதில் அலைந்து கொண்டிருந்த
மிருகத்தை பிடித்து.
சிந்தை என்னும் சிறையில் அடைத்து
ஞானம் என்னும் ஆற்றில் குளிக்க வைத்து
வெளி உலகுக்கு அழைத்து வந்தேன்.
என்ன வேடிக்கை  !
ஞானம் பெற்ற மிருகமாக
வெளிப்பட்டது.

Monday, January 11, 2010

1989-2010



ஷேய்க் அபூபக்கர் ஒளியுள்ள கந்தூரில்
பிள்ளைய காணாகிவிட்டு வந்துருக்க.
அலைவாய்க்கரை முச்சூடும் தேடிட்டோம்.
பிள்ளையை காணோம்.......
அழுகையை நிறுத்து
உங்கம்மா பேரு என்னா ?
உங்கப்பா பேரு என்னா ?
நா௬ரம்மா அவன் தெக்குதெரு
பிள்ளை டி .
உங்க வப்பா பேரு என்னா ?
உங்க உம்மா பேரு என்னா ?
அழாதே தம்பி.
நான் பிள்ளையை தெக்கு தெருவுல
விட்டுட்டு வாரேன்.
நா௬ரம்மா தோளில் அமர்ந்து உலகை பார்த்துகொண்டு
சென்றான்.........
இப்பொழுதும் தொலைந்து விட்டான்
இப்பொழுதும் அழுது கொண்டிருக்கிறான்

Wednesday, January 6, 2010

இருள்கள்


இருள்கள் மண்டிய தரை தெரியாத பாதாளத்தில்
விழுந்து கொண்டிருக்கும் உயிரின்
கதறல் கேட்கிறது .
ஏந்தும் கரங்கள் எங்கே
ஒரு காற்றை போல்
வருமோ.
ஒரு மின்னலை போல்
வருமோ
அல்லது
கானல் ஆகுமோ.