Thursday, January 15, 2009

குடிக்க வா



பிறரின் இதயங்களில் இருந்து வழியும்
குருதியை
குடித்து குடித்து என் இதயம் நிரம்பி விட்டது.
என் இதயத்தில் இருந்து நிரம்பி வழியும்
குருதியை
குடிக்க யாரவது வாருங்கள்,,

Monday, January 12, 2009

யாரது




தென்றல் என் இதயவாசல் வந்தது .
அனுமதி கேட்காமல் உள்ளே நுழைந்தது .
நீ யார் என்று கேட்டேன் ?
அனுமதி கேட்காமல் வருவது என்றது.
இதுவரை யாரும் திறக்க விரும்பாத என் இதயத்தை
ஏன் திறந்தாய் என்றேன் ?
சிறிது சிரித்தது சிறிது அழுதது .
தென்றலின் குளிர்ச்சியை முழுமையாக
உணரும் முன் என்னில் இருந்து நழுவி
வெகுதொலைவு சென்றுவிட்டது .

Tuesday, January 6, 2009

தனிமையே



நீ பாலைவனத்தில் பிறந்தவளோ ?
கள்ளி பால் அருந்தி வளர்ந்தவளோ ?
ஏன் இவ்வாறு என்னை குத்துகிறாய் .

நீ ஆழியின் நடுவே பிறந்தவளோ ?
அலை ஓசை கேட்டு வளர்ந்தவளோ ?
ஏன் என்னை இவ்வாறு இம்சிக்கிறாய்,

நீ சிறைச்சாலையில் பிறந்தவளோ ?
காவலர் அடி ஓசை கேட்டு வளர்ந்தவளோ ?
ஏன் என்னை இவ்வாறு துவைத்து எடுக்கிறாய்.

நீ பலரின் துன்பக்கண்ணிரை குடித்து வளர்ந்தவளோ ?
அவர்களின் செந்நீரில் குளித்து வளர்ந்தவளோ ?
ஏன் என்னை இவ்வாறு பிழிகிறாய்

நீ கொடுத்த வலிகளெல்லாம் என் மனதை
தகர்க்கும் ஏவுகணை என்றா நினைக்கிறாய் ?

பொறுமையின் குன்றில் ஏறி காத்திருப்பேன்

ஒரு நாள் இந்த பாலைவனத்திலும் மனித
நிழல் விழும்

ஒரு நாள் இந்த ஆழியிலும் கப்பல்
செல்லும்