Wednesday, September 24, 2008

நிலா காய்கிறது





நான்
ஒரு கோப்பை தேனிர்
நிலவொளி நிறைந்த வானம் !
எங்களுக்கிடையிலான உரையாடல் தான் எத்துணை இனிமையானவை !
நிலவே நினைவு இருகிறதா ?
என் குழந்தை பருவத்தில்
நீ வான ஓடையில் அன்ன நடைப்போட்டு செல்லும் அழகை
ரசித்துக்கொண்டே வீடு நோக்கி செல்வேன் ;
என் விரல்களை பற்றிக்கொண்டு நீ அழைத்துச்
செல்லுவதை போன்ற உணர்வுடன் !
பள்ளங்களும் சாக்கடைகளும் என் கால்களை இடறி விட்டு
வலியால் கண்களில் நீர் அரும்பிய போதும் உன் மிதான
பார்வை மீண்டதே இல்லை !
உன் ஒளி கீற்றால் என் விட்டு யூகலிப்டஸ் மரத்தின் கூரிய
இலைகளால் வெண் முத்தாக உருமாறி என் விட்டு
முற்றத்தில் துள்ளிகுதித்து குதூகலிப்பாய் !
என் கைகளை கன்னங்களில் முட்டுக் கொடுத்து
உன் விளையாட்டை குறுஞ் சிரிப்புடன் கண்கொட்டாமல்
ரசித்துக்கொண்டே இருப்பேன் !
யூகலிப்டஸின் மென் காற்று அந்த தருணத்தை இன்னும்
இனிமையாக்கின !
முழு மதியே !
இப்பொழுதெல்லாம் உன்னுடன் உரையாடவும்
உன் விரல் பிடித்து நடக்கவும் இந்த அவசரகதி
வாழ்க்கை அனுமதிப்பதில்லை !

10 comments:

SHIV TEMPLE said...

i enjoyed reading this poem. We nice thoughts about moon.

SHIV TEMPLE said...

i enjoyed reading this poem. Thoughts about moon is very nice.

Divya said...

Very nice lines Haris,
Keep writing!!

Abu Ayesha Mohamed Haris Al-Athari said...

பின்னுடம் இட்ட அனைவருக்கும் நன்றி

தினேஷ் said...

சிந்தனையின் வெளிப்பாடு மிக அருமை நிறைய எழுதுங்கள் தோழரே...


தினேஷ்

Vijay said...

கவிதையெல்லாம் சூப்பரோ சூப்பர்!!!

Abu Ayesha Mohamed Haris Al-Athari said...

மிக்க நன்றி தோழரே!!!!!!!!!. தொடர்ந்து வருகை தாருங்கள்

Nilavan said...

அழகான நடையுடன்
அருமையான சொற்கள் கொண்டு
சிறப்பாய் எழுதி இருக்கிறீர்கள் முஹம்மது..

மேலும் மேலும் எழுதுங்கள்......

வாழ்த்துக்கள்.

வாழ்க தமிழுடன்,
நிலவன்.

Nilavan said...

உரையாடலில் கூறியபடி உங்களின் வலைப்பூ வடிவமைப்பையும், எழுத்துக்களின் அளவையும் மாற்றுன்ங்கள் நண்பரே,,

உங்களின் வலைப்பூக்களுக்கு பொலிவு கிடைக்கச் செய்யுங்கள்......

( உங்களின் எழுத்துக்கள் பொலிவு, அதற்கு அணி செய்ய வடிவமைப்பையும் மாற்றுங்கள்.....)

Thalha said...

Nice . Kalakittada machan. I just could not believe if you wrote it on your own. Keep up the good work. I ll join you soon.