Saturday, February 12, 2011

சிட்டிக்களையம்

சொற்களை உடைத்து உடைத்து
அவன் மீது எரிந்தது போது.
அவனிடம் இருந்து மௌனத்தை தவிர
வேறு எந்த விடையையும் பெற முடியாது.
நிகழ் காலம் கசப்பாகி போனபோது
இறந்த காலத்தின் இனிமையான நினைவுகள்
அவனுக்கு சிறிது ஆறுதலை வழங்குகிறது.
முதலாளித்துவத்துதின் பெருவெள்ளம் எமது எல்லா அடையாளத்தையும்
வாரிச் சுறிட்டிக்கொண்டது .
அதன் தொழிற்சாலையில் உற்பத்தி ஆனா முகமூடியை
அணிய வற்புறுத்துகிறது.
அவனக்கு வேறு எந்த தேர்வும் இல்லாமல்
அவன் சிறுவயதில் விளையாடியச் சிட்டிக்களையங்களை
நினைத்துக் கொண்டு.
அவனும் அணிந்து கொண்டான்