மூழ்கி கொண்டிருக்கிறது கப்பல்
எவ்வளவு அழகாக வேடிக்கை பார்கிறார்கள்.
உதவி என்ற பெயரால் வீசப்படும் வலைகள்
எல்லாம்
தேர்தலை நோக்கி வீசப்படும் எச்சி எலும்புகள்.
அந்த சாரிகள்
இந்த சாரிகள்
நடுநிலையாளர்கள்
சனநாயகவாதிகள்
நிறுத்துங்கள் அய்யா உங்கள் பெரும் பேச்சை.
உங்கள் உறுஞ்சு குழல் உருஞ்ச இன்னும் எங்களிடம்
என்ன இருக்கிறது என்று நினைகிறிர்கள்.
உங்களை கண்டு பொந்துகளிலும் புதருகளிலும் ஒளிந்து
கொண்டிருக்கும் மக்களின் இதையங்கள் கருகும் வாடை
நாசி துவாரங்களை துளைக்க வில்லையா.
மனம் மீள முடியா துயரத்துள் எம்மக்களை
வீழ்த்திவிட்டு.
பைகட்டுகளை நிரப்பிக்கொண்டு செல்லும் கனவான்களே.
Thursday, December 30, 2010
Subscribe to:
Comments (Atom)