
எனக்கான கனவுகள் மறுக்கப்பட்டு விட்டது.
என்னுடைய கடைசி துண்டு காணியும் பிடுங்கபட்டுவிட்டது.
நான் ஓடி விளையாண்ட கடற்கரையில்
என் காலடித்தடங்கள் அழிக்கபட்டு விட்டன.
என் இருப்புக்கான அடையாளமும் அழிக்கபட்டு விட்டது.
என் பிள்ளைகளுக்கு அடிமை
என்னும் சொத்தை வழங்க விருப்பம் இல்லாமல்,
இந்த இரக்கம் இல்லாத உலகத்திடம்
என் அடையாளத்தை திருப்பி கேட்டுத் திரியும்
ஒரு பிச்சைக்காரன்.