Thursday, March 26, 2009

எங்கு இருக்கிறாய் நீ ?

கனவுகள் உடைந்து அதன் சில்லுகள்
கால்களை உறுத்திய தருணத்தில்.
வாழ்க்கை கேவலத்தையும் அவமானத்தையும்
பருகவைத்த தருணத்தில் .
உன்னோடு பேச ஆயிரம் சேதிகள் இருக்கின்றன .
உன்னிடம் சொல்ல ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன.
எங்கு இருக்கிறாய் நீ ?

Tuesday, March 3, 2009

முதுகெலும்பு


தெருவில் விளையாட செல்லும்போது
உச்சிப்படை முனி வரும் வெளியே போகாதே என்பாய்.
சாயங்காலம் வெளியே சென்றால்
கூதக்காது அடிக்குது வெளியே போகாதே என்பாய்.
கடல்கரைக்குப் போகாதே பிள்ளை பிடிக்கிறவன்
பிடிச்சுகுவான் என்பாய் .
கணக்கு போடலைனா நீ என் பிள்ளையே
இல்லை என்பாய் .
பால்கார ஆத்தாவிடம் உன்னை தவிட்டுக்கு
தான் வாங்கினோம் என்பாய்.
அவமானம் தாங்காமல் சுருண்டு வீழ்ந்தேன் .
சிறுவயதில் நீ முறித்துப்போட்ட தன்னம்பிக்கை என்னும்
முதுகெலும்பை இப்போது சரிசெய்ய சொல்லுகிறாயே.